திமுக கூட்டத்தில் வழங்கப்பட்ட அட்டையுடன் முதல்வர் அறைக்கே வரலாம்: மு.க.ஸ்டாலின்

0 3473
திமுக கூட்டத்தில் வழங்கப்பட்ட அட்டையுடன் முதல்வர் அறைக்கே வரலாம்

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திமுக கூட்டத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டையுடன் முதலமைச்சர் அறைக்கே நேராக வரலாம் என்று திருவாரூரில் நடந்த தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று திருவாரூரில் தேர்தல் சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். அப்போது பேசிய ஸ்டாலின், நாடாளுமன்றத் தேர்தலைப் போல சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றியைத் தேடித்தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகள் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருப்பதாக அவர் விமர்சித்தார்.

கொரோனா தொற்று காலத்தில் கட்சி நிர்வாகிகள் ஆற்றிய பணிகளை விவரித்த ஸ்டாலின், தி.மு.க. ஆட்சிக்காலத்தில் திருவாரூர் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார்.

திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் 505 உறுதிமொழிகளும் நிறைவேற்றப்படும் என்றும், ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களில் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

திருவாரூர் பூண்டி கே.கலைவாணன், மன்னார்குடி டிஆர்பி.ராஜா, நன்னிலம் ஜோதிராமன், திருத்துறைப்பூண்டி க.மாரிமுத்து ஆகியோரை ஆதரித்து ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments