"விடியலை எதிர்நோக்கித் தமிழகம்": மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

0 2444
"விடியலை எதிர்நோக்கித் தமிழகம்": மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

மே மாதம் 2ம் தேதி 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி என்ற செய்தி வரும் என்றும் அதன் பிறகு மக்கள் பிரச்சனைகள் மற்றும் 505 தேர்தல் உறுதிமொழிகள் நிறைவேற்றப்படும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார். 

திருவாரூர் தெற்கு ரத வீதியில் திமுக மற்றும் தோழமை கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதற்கட்ட பிரச்சாரத்தைத் தொடங்கினார். திருவாரூர் வேட்பாளர் கலைவாணன், நன்னிலம் தொகுதி வேட்பாளர் ஜோதிராமன், மன்னார்குடி வேட்பாளர் டி.ஆர்.பி. ராஜா, திருத்துறைப்பூண்டி வேட்பாளர் மாரிமுத்து ஆகியோரை ஆதரித்து திறந்தவெளி வாகனத்தில் நின்றவாறு ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். திருவாரூர் மாவட்டத்திற்கு திமுக ஆட்சி காலத்தில் தான் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் பட்டியலிட்டார்.

திமுக சொன்னவை அனைத்தையும் அதிமுகவினர் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர் என ஸ்டாலின் குற்றம்சாட்டினார். திமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளுங்கட்சி போல செயல்பட்டு வருகிறது என்று கூறிய ஸ்டாலின், கொரோனா வந்த போது ஆளுங்கட்சி செய்ய முடியாத காரியங்களை எல்லாம் திமுக முன்னின்று செய்தது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments