தமிழகத்தில் மேலும் 836 பேருக்கு கொரோனா.. மீண்டும் உயரத் தொடங்கி உள்ள கொரோனா பாதிப்பு

0 12206
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 836 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ள மாநில சுகாதாரத்துறை, பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 553 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக கூறியுள்ளது.

சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளது. ஆர்மேனியாவில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு, வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.

சென்னை பெருநகரில் 317 பேருக்கும், கோயம்புத்தூரில் 70 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக கூறியள்ள தமிழக சுகாதாரத்துறை 22 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளதாக தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments