இந்த வேகத்தில் போனால் இந்தியர்கள் அனைவருக்கும் எப்போது தடுப்பூசி போட்டு முடிப்பது? - நாடாளுமன்ற நிலைக்குழு

0 1858
இந்த வேகத்தில் போனால் இந்தியர்கள் அனைவருக்கும் எப்போது தடுப்பூசி போட்டு முடிப்பது?

 இதே வேகத்தில் போனால், இந்தியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்க பல வருடங்கள் ஆகும் என உள்துறை அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு கவலை தெரிவித்துள்ளது.

மக்களவையில்  உள்துறை அமைச்சகத்திற்கான மானிய கோரிக்கை குறித்து இந்த நிலைக்குழு தாக்கல் செய்த அறிக்கையில், இது வரை இந்தியர்களில் ஒரு சதவிகிதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது மிகவும் கவலை அளிப்பதாகவும், கொரோனா வைரஸ்  பல நாடுகளில் மரபணு மாற்றங்களை கண்டுள்ளதால், தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி திட்டத்தை விரைவு படுத்துமாறும் மத்திய அரசை நிலைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

ஏற்கனவே தடுப்பூசி போட்டவர்களில் பலருக்கு இரண்டாவது டோஸ் போடுவது தவறி விட்டதாகவும் நிலைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments