துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ரூ. 4.43 கோடி சொத்து மதிப்பு உள்ளதாக வேட்பு மனுவில் தகவல்

0 1417
தமிழகத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த உறுதிமொழிப் பத்திரத்தில் தமக்கு 4 கோடியே 43 லட்சத்து 32 ஆயிரத்து 488 ரூபாய் மதிப்பில் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தனது மனைவி விஜயலட்சுமி பெயரில் 10 கோடியே 6 லட்சத்து 71 ஆயிரத்து 858 ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வத்திற்குப் பூர்வீகச் சொத்து எதுவும் இல்லை எனவும், அவரது பெயரில் விவசாய நிலங்கள் எதுவும் இல்லை எனவும், அசையா சொத்து மதிப்பை விட வங்கிக்கடன் அதிகமாக உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments