மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. ஊழலற்ற நல்லாட்சியை தரும் - மத்திய அமைச்சர் அமித்ஷா

0 1214
பா.ஜ.க. வெற்றி பெற்றால் மேற்கு வங்கத்தில் ஊழலற்ற நல்லாட்சியை கொடுக்குமென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. வெற்றி பெற்றால் மேற்கு வங்கத்தில் ஊழலற்ற நல்லாட்சியை கொடுக்குமென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

அந்த மாநிலத்தின் ராணிபந்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், ஹெலிகாப்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தாம் கூட்டத்தில் பங்கேற்பதில் தாமதம் ஏற்பட்டது என்றார்.

ஆனால் இதனை எதிர்க்கட்சிகள் சதி என தாம் ஒருபோதும் திரித்துக் கூற தயாரில்லை என்ற அவர், மம்தா பானர்ஜியின் காலில் முறிவு ஏற்பட்டதற்கு விபத்தே காரணமென தேர்தல் ஆணையம் கூறுகிறது என்றார்.

தமது கால் காயம் குறித்து கவலைப்படும் மம்தா, மேற்கு வங்கத்தில் கொல்லப்பட்ட பா.ஜ.க. தொண்டர்கள் 130 பேரின் தாய்மார்களை பற்றி கவலை கொள்ளவில்லை என்று அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments