ஒவ்வொரு தொகுதிக்கும் 9 பறக்கும் படையினர் : சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

0 580
சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னையில் உள்ள ஒவ்வொரு தொகுதிக்கும் 9 பறக்கும் படையினர் என்ற விகிதத்தில் 144 பறக்கும் படையினர் பணியமர்த்தப்பட்டிருப்பதாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும் சென்னை மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி வளாகத்தில் தேர்தல் பறக்கும் படை குழுவினருடனான ஆய்வு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 17 புகார்கள் பெறப்பட்டதாகவும், அவற்றில் 14 புகார்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மெசேஜ் அல்லது வாய்ஸ் மெசேஜை மொத்தமாக வெளியிடும் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் முன் அனுமதி பெற வேண்டும் எனவும் தேர்தல் அதிகாரி பிரகாஷ் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments