போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியும் வயது வரம்பை குறைக்கலாம்: மத்திய அரசுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியும் வயது வரம்பை குறைக்கலாம்
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை, 18 ல் இருந்து 16 ஆக குறைக்கலாம் என நாடாளுமன்ற நிலைக்குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
இதனால்,16 வயதான இளங்குற்றவாளிகளை மிகவும் கொடூரமான பாலியல் அல்லது கொலை குற்றங்களை நடத்துவதில் இருந்து தடுக்க இயலும் என எம்பி ஆனந்த் சர்மா தலைமையிலான உள்துறை விவகாரங்களுக்கான நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.
தற்போது இளங்குற்றவாளிகளில் பலர் கொடூர குற்றங்களை செய்யும் நிலை உள்ளதால், மத்திய அரசு இதை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் எனவும் நிலைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.
Comments