தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் தீவிரம்

0 915
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் செங்கோட்டையன், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

காட்பாடி தொகுதியில் போட்டியிடும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், தேர்தல் அலுவலர் புண்ணியகோடியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் தங்கமணி, வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுவை அளித்தார்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

சென்னை சேப்பாக்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின், மேளதாளங்கள் முழங்க தொண்டர்களுடன் பேரணியாக வருகை தந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் பேசிய அவர், தன்னை வாரிசு அரசியலாக பார்த்தால் மக்களே நிராகரித்து விடுவார்கள் என்றார்.

அதிமுக சார்பில் ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஜெயகுமார், ராயபுரம் மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

சென்னை திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் பேசிய அவர், திராவிட கட்சிகளின் பண பலத்தை வீழ்த்தி வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்தல் வியூகம் நேர்மைதான். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன்னுடைய தேர்தல் வியூகம் நேர்மைதான் என்றார்.

திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வி.ஜி.ராஜேந்திரன், வேட்பு மனு தாக்கல் செய்தார்.

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கர நாராயணனிடம் வேட்பு மனுவை வழங்கினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments