மகன் இறந்த துக்கத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தந்தை
மயிலாடுதுறையில் மகன் இறந்த துக்கத்தில், தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மயிலாடுதுறையில் மகன் இறந்த துக்கத்தில், தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேந்தங்குடியைச் சேர்ந்த வினோத் என்பவரது இரண்டாவது மகனான 10 வயது சிறுவன் சாம்சன், நேற்று தண்ணீர்பாய்ந்தான் குளத்திற்கு தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்றான். அப்போது சிறுவன் எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
சிறுவன் நீண்ட நேரமாக காணாததையடுத்து பெற்றோர் அளித்த தகவலின்படி, தீயணைப்புத் துறையினர் குளத்தில் நீண்ட நேரமாக தேடி சிறுவனின் உடலை சடலமாக மீட்டனர். மகன் இறந்த சோகத்தில் மூழ்கி இருந்த சிறுவனின் தந்தை, வினோத் வீட்டில் யாருமற்ற நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Comments