சிறுமிக்கு நடைபெறவிருந்த கட்டாயத் திருமணத்தை தடுத்து நிறுத்திய மகளிர் காவல்துறை..!

0 1566
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே சிறுமிக்கு நடைபெறவிருந்த கட்டாயத் திருமணத்தை மகளிர் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே சிறுமிக்கு நடைபெறவிருந்த கட்டாயத் திருமணத்தை மகளிர் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

தாராசுரம் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவரின் 20 வயது மகனுக்கும், 15 வயது சிறுமிக்கும் இன்று காலை அப்பகுதியிலுள்ள கோவிலில், கட்டாயத்திருமணம் நடைபெறுவதாக, கும்பகோணம் அனைத்து மகளிர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அங்கு சென்ற போலீசார், சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுதியதுடன், சிறுமி மற்றும் பெற்றோரை விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments