அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்க கோரி தொடர்ந்த வழக்கிலிருந்து விலகினார் டிடிவி தினகரன்

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்க கோரி தொடர்ந்த வழக்கிலிருந்து விலகி கொள்வதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்க கோரி தொடர்ந்த வழக்கிலிருந்து விலகி கொள்வதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில்
அதிமுக நிர்வாகிகளாக சசிகலா மற்றும் தினகரன் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக்கோரி சசிகலா மற்றும் டிடிவி தினகரன் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது, அமமுக கட்சி தொடங்கி விட்டதால் வழக்கில் இருந்து விலகி கொள்வதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
வழக்கை வாபஸ் பெறுவதா அல்லது தொடர்ந்து நடத்துவதா என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என சசிகலா தரப்பு தெரிவித்துள்ளது.
Comments