நோட்டாவுக்கு அதிக வாக்குப் பதிவானால் தேர்தலை ரத்து செய்யக் கோரிக்கை : மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

0 3457

ரு தொகுதியில் வேட்பாளர்கள் பெற்றதை விட அதிக வாக்குகள் நோட்டாவுக்குப் பதிவானால் அந்தத் தொகுதியில் தேர்தலை ரத்து செய்து மறு தேர்தல் நடத்தக் கோரிய மனுவுக்கு மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அஸ்வினி உபாத்யாய் என்பவர் தாக்கல் செய்த மனுவின் விசாரணையின்போது, நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்து நிராகரிக்கப்படும் வேட்பாளர்கள், மறு தேர்தலில் போட்டியிட முடியாது எனும்போது தகுதியில்லா வேட்பாளர்களை நிராகரிக்கும் அதிகாரம் மக்களுக்குக் கிடைப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனால் தகுதியுள்ள வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் நிறுத்துவதற்கு வழிவகுக்கும் என வாதிடப்பட்டது. இந்தக் கோரிக்கை ஏற்பதற்கு மிகக் கடினமாக உள்ளதாகத் தலைமை நீதிபதி தெரிவித்தார்.இந்த மனுவுக்குப் பதிலளிக்க மத்திய அரசுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments