13 தொகுதிகளுக்கு மேல் தரமுடியாது என கூறியதால் அதிமுக கூட்டணியில் இருந்து விலகல் - பிரேமலதா

அதிமுக கூட்டணியில் எங்களை கடைசியாகவே பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்- பிரேமலதா விஜயகாந்த்
விஜயகாந்த் சில காலம் ஓய்வெடுக்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் தேர்தலில் போட்டியிடவில்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2011 ஆம் ஆண்டு தேர்தலில் விஜயகாந்த் கூட்டணிக்கு வந்தால்தான் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்வேன் என ஜெயலலிதா கூறினார் என்று குறிப்பிட்டார்.
அமமுகவுடனான தங்கள் கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளராக டிடிவி தினகரனை ஏற்றுக்கொள்கிறோம் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
13 தொகுதிகளுக்கு மேல் தரமுடியாது என கூறிவிட்டதால் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற நேரிட்டதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
Comments