வாஜ்பாய் அரசில் அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்கா திரிணமூல் காங்கிரசின் தேசிய துணை தலைவராக நியமனம்

0 756
வாஜ்பாய் அரசில் அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்கா திரிணமூல் காங்கிரசின் தேசிய துணை தலைவராக நியமனம்

திரிணமூல் காங்கிரசில் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்காவுக்கு அந்த கட்சியின் தேசிய துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி அரசில் அமைச்சராக இருந்த அவர், கடந்த சனிக்கிழமை திரிணமூல் காங்கிரசில் சேர்ந்தார். 83 வயதான அவர் இந்த முதுமையான பருவத்தில் தீவிர அரசியலுக்கு ஏன் வந்தார் என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, நந்திகிராமில் கடந்த புதன்கிழமை மேற்கு வங்க முதலமைச்சர் ம ம்தா பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்பட்டது தம்மை பெரிதும் பாதித்ததாகவும், அதன் காரணமாகவே மீண்டும் அரசியலுக்கு வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments