விவசாயிகள் போராட்டம் காரணமாக மூடப்பட்ட டெல்லி-காசிப்பூர் எல்லை போக்குவரத்துக்கு திறப்பு

விவசாயிகளின் போராட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த டெல்லி-காசிபூர் எல்லை இன்று முதல் போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது.
விவசாயிகளின் போராட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த டெல்லி-காசிபூர் எல்லை இன்று முதல் போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் போராட்டத்தின் இடையே, குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் நடந்த டிராக்டர் பேரணியில் கலவரம் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து காசிப்பூர் எல்லை அன்று முதல் மூடப்பட்டது. இந்த நிலையில், எல்லை மூடப்பட்டதால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமம் குறித்து டெல்லி போலீசார், காசிபூர் அமைந்துள்ள காசியாபாத் மாவட்ட காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
அதன் விளைவாக எல்லை திறக்கப்பட்டுள்ளது. ஆனால் டெல்லியில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு செல்பவர்கள் மட்டுமே இந்த எல்லை வழியாக அனுமதிக்கப்படுவர்.
Comments