"இந்திய-அமெரிக்க உறவுகள் ஆழமாக வலுவடைந்துள்ளன" - இந்திய தூதர் தரண்ஜித் சிங் சித்து

0 649
"இந்திய-அமெரிக்க உறவுகள் ஆழமாக வலுவடைந்துள்ளன" - இந்திய தூதர் தரண்ஜித் சிங் சித்து

ந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு மேலும் ஆழமாக வலுவடைந்துள்ளது என அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண்ஜித் சிங் சித்து தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த குவாட் தலைவர்கள் காணொலி சந்திப்பின் போது இது பிரதிபலித்ததாக செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.

அந்த சந்திப்பின் போது பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சிறப்பான பரஸ்பர உறவை பகிர்ந்து கொண்டதாகவும் அவர் கூறினார்.

குவாட் சந்திப்பின் விளைவாக, அமெரிக்கா தடுப்பூசி தொழில்நுட்பத்தையும், இந்தியா அதற்கான உற்பத்தியையும், ஜப்பான் அதற்கான நிதி ஆதாரங்களையும், ஆஸ்திரேலியா தடுப்பூசி போக்குவரத்தையும் மேற்கொள்ளவிருக்கின்றன என்றும் இந்திய தூதர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments