நான் ஜெயித்தால் வலிமை அப்டேட் கிடைக்கும் தம்பி... வைரலாகும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனின் ட்வீட்

0 8848

வலிமை அப்டேட் கேட்ட ரசிகரிடம், தேர்தலில் வெற்றி பெற்றதும் நிச்சயம் தருகிறேன் என்று பாஜக வேட்பாளராக களம் காணும் வானதி சீனிவாசன் கூலாக பதிலளித்துள்ளது இணையத்தில் வைரலாகியுள்ளது.

வரும் ஏப்ரல் 6 ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு, தேர்தல் வாக்குறுதிகள், சூறாவளி பிரச்சாரம் என தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகமெங்கும் பம்பரமாய் சுழன்று வருகின்றனர்.

பெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும்? கேஸ் சிலிண்டர் விலை குறைய ஏதும் வாய்ப்பிருக்கிறத்தருவார்களா? என்று மக்கள் கவலையில் ஆழ்ந்திருக்கின்றனர். இந்த நிலையில் அஜித் ரசிகர் ஒருவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசனிடம் எழுப்பியுள்ள கேள்வி பலரையும் அதிர்ச்சியோடு கலந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. கொரோனாவின் தாக்கத்தால் இந்தாண்டு வெளியாகி இருக்க வேண்டியப் படம் இன்னமும் படப்பணிகள் நிறைவடையாமல் சென்றுகொண்டிருக்கிறது. அஜித் ரசிகர்களும் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் வலிமை அப்டேட் குறித்து கேட்டு வந்தனர். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடி கொண்டிருந்த இங்கிலாந்து வீரர் மொயீன் அலியிடமும், பிரச்சாரத்திற்கு வந்த எடப்பாடியிடமும் வலிமை குறித்து அப்டேட் கேட்டதாக வெளியான வீடியோக்கள் வைரலானது. இது எங்கு போய் முடியுமோ என்று நினைத்த நடிகர் அஜித், ரசிகர்கள் தேவையற்ற இடங்களில் வலிமை அப்டேட் குறித்து கேட்க வேண்டாம் என்று அறிக்கை வெளியிடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.

இந்த நிலையில் நடிகர் அஜித்தின் ரசிகர் ஒருவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் வலிமை அப்டேட் குறித்து கேட்டுள்ளார். அதற்கு கொஞ்சமும் கோபப்படாமல், ”நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் கோவை குசும்போடு கூலாக பதிலளித்துள்ளார்.

வானதி சீனிவாசனின் இந்த டிவிட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது டிவிட்டிற்கு கமெண்ட் செய்து வரும் பலரும் ”அப்போ நீங்களும் ஜெயிக்கமாட்டீங்க.. எங்களுக்கு வலிமை அப்டேட்டும் கிடைக்க போறதில்லை” என்றும், ”அப்படி ஒரு அப்டேட்டே வேண்டாம்” என்றும், ”இதுக்காகவே உங்கள ஜெயிக்க வைக்கிறோம் என்றும் நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை டிவீட்டி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments