குழந்தைகளுக்கு வரும் ஆட்டிசத்தை முன்கூட்டியே கண்டுபிடிக்க பிரத்யேக கருவி

0 1383
குழந்தைகளுக்கு வரும் ஆட்டிசத்தை முன்கூட்டியே கண்டுபிடிக்க பிரத்யேக கருவி

குழந்தைகளுக்கு வரும் ஆட்டிசம் (autism) நோயை பிரத்யேக கருவி மூலம் கண் விழித்திரையை ஸ்கேன் செய்து ஆரம்ப காலங்களில் குணப்படுத்தும் கருவியை ஹாங்காக் விஞ்ஞானி கண்டுபிடித்து உள்ளார்.

ஹாங்காக்கில் உள்ள சீன பல்கலைகழக பேராசிரியர் பென்னி ஜீ (Benny Zee) கருவி சிறந்த முறையில் தயாராகி வருவதாகவும் விரைவில் முழு வெற்றி பெறுவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

சராசரியாக 13 வயதுக்குட்பட்ட ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான 46 குழந்தைகள் உள்பட 70 குழந்தைகளிடம் கருவியை கொண்டு ஆய்வு செய்ததில் 95 புள்ளி 7 சதவீத பாதிப்புக்குள்ளான குழந்தைகள் துல்லியமாகக் கண்டுபிடிக்கப்பட்டதாக பென்னி தெரிவித்தார்.

அதிக தெளிவுத் திறன் கொண்ட கேமரா மற்றும் அதிநவீன கணினி மூலம் கண் விழித்திரையை ஆய்வு செய்வதால் குழந்தைகளுக்கு வரும் ஆட்டிசத்தை முன்கூட்டியே அறிந்து பிரத்யேக சிகிச்சை அளிக்க முடியும் என விஞ்ஞானி தெரிவித்து உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments