ரூ 1.28 கோடி சீட்டிங்... சிட்டி யூனியன் வங்கி மேலாளர் அதிரடி கைது..! அரசியல் பிரமுகர் மகன் தப்பினார்
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 708 புள்ளிகள் சரிவு

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 708 புள்ளிகள் சரிவு
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்றைய வணிக நேரத் தொடக்கத்தில் 700 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்தது.
இந்தியப் பங்குச்சந்தைகள் இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் இருந்தே சரிவைச் சந்தித்தன. 9.40 மணியளவில் மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 708 புள்ளிகள் சரிந்து ஐம்பதாயிரத்து 84 ஆக இருந்தது.
தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு நிப்டி 196 புள்ளிகள் சரிந்து 14 ஆயிரத்து 835ஆக இருந்தது. உலோகத் தொழில் நிறுவனங்கள், நிதி நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியடைந்தன.
Comments