நாமக்கல்லில் வணிக வளாகத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதம்

0 4054
நாமக்கல்லில் நள்ளிரவில் வணிக வளாகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் 10 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமானது.

நாமக்கல்லில் நள்ளிரவில் வணிக வளாகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் 10 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமானது.

திருச்சி சாலையில் உள்ள கிரீன்ஸ் வணிக வளாகத்தில் நேற்று இரவு திடீரென தீ பற்றியது. தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் வருவதற்குள் நாலாபுறமும் தீ பரவி கொளுந்து விட்டு எரிய தொடங்கியது.

6 தீயணைப்பு வாகனங்களில் வந்த 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இரவில் தீ விபத்து ஏற்பட்டதால் சுமார் 5 மணி நேரம் அந்த பகுதியில் மின்சாரம் தடைபட்டது. தற்போது வரை உயிர் சேதங்கள் இல்லை என்றும், விபத்து க்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments