ஓசூர் அருகே 3 பேரை கொன்ற ஒற்றையானை பிடிபட்டது

0 5043
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 3 பேரை கொன்று பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ஒற்றை காட்டுயானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 3 பேரை கொன்று பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ஒற்றை காட்டுயானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.

சானமாவு வனப்பகுதியில் சுற்றிவந்த ஒற்றையானை அருகே உள்ள போடூர், ராமாபுரம், ஆழியாளம் உள்ளிட்ட கிராமங்களில் விளைநிலங்களை சேதப்படுத்தி வந்ததோடு, பொதுமக்களையும் அச்சுறுத்தி வந்தது.

3 பேரை கொன்றதோடு 4 பேரை காயப்படுத்தியது. இந்நிலையில் மயக்க ஊசி செலுத்தி காட்டுயானையை பிடிக்கும் பணியில் சில தினங்களாக வனத்துறையினர் ஈடுபட்டியிருந்தனர்.

திருச்சிப்பள்ளி பகுதியில் சுற்றித்திரிந்த காட்டுயானைக்கு மருத்துவக்குழுவினர் அடுத்தடுத்து 2 மயக்க ஊசிகளை செலுத்தினர். இதனையடுத்து ஒற்றையானை லாரியில் ஏற்றப்பட்டு அடர்ந்த காட்டுப் பகுதிக்கு கொண்டுசெல்லபடுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments