ஒரு கை இன்றி முடி திருத்தும் தொழிலில் அசத்தி வரும் பெண்மணி..!

0 1617
ஒரு கை இன்றி முடி திருத்தும் தொழிலில் அசத்தி வரும் பெண்மணி..!

ரு கை இல்லாவிட்டாலும் தன்னம்பிக்கை இருந்தால் சாதிக்க முடியும் என வியட்நாம் நாட்டில் வாழ்ந்து காட்டி வருகிறார் 42 வயது பெண்மணி ஒருவர்.

லே தி கிம் டிராம் (Le Thi Kim Tram) என்ற அந்த பெண்மணி, ஹோ ஷி மின்க் (Ho Chi Minh City) நகரில், அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு விபத்தில் இடது கையை இழந்துவிட்ட நிலையில், கணவர் விட்டுவிட்டு சென்றுவிட, இரு குழந்தைகள் மற்றும் வயதான தாயாரை கவனிக்கும் பொறுப்பு இவர் மீது விழுந்தது.

இதையடுத்து குடும்பத்தின் பூர்வீக தொழிலான முடி திருத்தும் கடையை நடத்தி வரும் டிராம், ஒற்றை கையுடன் தன்னம்பிக்கை கொண்டு உழைத்து வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments