புதுச்சேரியில் வேட்பாளர் தேர்வில் நீடிக்கும் இழுபறி..! இன்று மாலைக்குள் அனைத்து கட்சிகளும் வேட்பாளரை அறிவிக்க வாய்ப்பு?

0 1107
புதுச்சேரியில் வேட்பாளர் தேர்வில் நீடிக்கும் இழுபறி..! இன்று மாலைக்குள் அனைத்து கட்சிகளும் வேட்பாளரை அறிவிக்க வாய்ப்பு?

புதுச்சேரியில் திமுக தவிர மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில் இன்று மாலைக்குள் அனைத்துக் கட்சிகளும் அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 15 இடங்களிலும் திமுக 13 இடங்களிலும் விடுதலை சிறுத்தைகள் ஒரு இடத்திலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் போட்டியிடும் என தொகுதி பங்கீடு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திமுக 13 இடங்களில் 12 இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. காங்கிரஸ் கட்சியில் நேர்காணல் காணப்பட்டு விரைவில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட உள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள என் ஆர் காங்கிரஸ் 16 இடங்களிலும் பாஜக அதிமுக பாமக உள்ளிட்ட கட்சிகள் 14 இடங்களிலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், பாஜக- அதிமுக ஆகிய கட்சிகள் இதுவரை தொகுதிப் பங்கீட்டையோ, வேட்பாளர் பட்டியலையோ அறிவிக்கவில்லை. இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

என் ஆர் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதி மற்றும் வேட்பாளர் விவரம் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments