பயணி ஒருவருக்கு திடீரென உடல்நலகுறைவு ஏற்பட்டதால் டெல்லி செல்லும் விமானம் நாக்பூரில் அவசரமாகத் தரையிறக்கம்

0 861
பயணி ஒருவருக்கு திடீரென உடல்நலகுறைவு ஏற்பட்டதால் டெல்லி செல்லும் விமானம் நாக்பூரில் அவசரமாகத் தரையிறக்கம்

டெல்லி செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவருக்கு திடீரென உடல்நலகுறைவு ஏற்பட்டதால் நாக்பூர் விமான நிலைத்தில் அவசர அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது.

பீகாரைச் சேர்ந்த சோட்டுசிங் நரியன்சிங் யாதவ் என்பவர் சென்னையிலிருந்து டெல்லி செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணித்துள்ளார். இந்நிலையில் திடீரென அவருக்கு ஏற்பட்ட உடல்நலகுறைவால் விமானம் நாக்பூரில் உள்ள அம்பேத்கர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

உடனடியாக நாக்பூரில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments