உடான் திட்டத்தின் கீழ் 390 விமான வழித்தடங்களுக்கு ஏல விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு

0 815
உடான் திட்டத்தின் கீழ் 390 விமான வழித்தடங்களுக்கு ஏல விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு

டான் திட்டத்தின் கீழ் 390 விமான வழித்தடங்களுக்கு சேவைகளை வழங்குவதற்கான ஏல விண்ணப்பங்களை வரவேற்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உடான் திட்டத்தின் கீழ் 325 வழித்தடங்கள் மற்றும் 56 விமான நிலையங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உள்நாட்டில் உள்ள மேலும் பல முக்கிய நகரங்களுக்கு விமான சேவையை விரிவுபடுத்திடும் வகையில் 392 விமான வழித்தட சேவைகளுக்கான ஏல விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளது. தற்போதைய இந்த ஏல நடைமுறை இன்னும் ஆறு வாரங்களில் முழுமையடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments