ஆந்திர உள்ளாட்சித் தேர்தலில் ஜெகன்மோகன் கட்சி அமோக வெற்றி

0 4935
ஆந்திர மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி 80 சதவீத வாக்குகளுடன் அமோக வெற்றி பெற்றுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி 80 சதவீத வாக்குகளுடன் அமோக வெற்றி பெற்றுள்ளது.

மாநகராட்சிகள், நகராட்சி மற்றும் நகர் பஞ்சாயத்துகளுக்கு கடந்த 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், விசாகப்பட்டினம், குண்டூர், விஜயவாடா உள்ளிட்ட 12 மாநகராட்சிகளையும் ஜெகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

75 நகராட்சிகளில் 73-ல் ஆளும்கட்சிக்கே வெற்றி கிடைத்துள்ளது. இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்த ஜெகன் மோகன், இந்த மாபெரும் வரலாற்று வெற்றி மக்களுக்கானது என்றும், தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் பொறுப்பையும் உயர்த்தியுள்ளது என்றும் பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments