குறிஞ்சிப்பாடி தொகுதியில் அதிமுக அலுவலகத்தை சூறையாடிய ராம. பழனிச்சாமியின் ஆதரவாளர்கள்

0 6036

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதியில் அதிமுக அலுவலகத்தை சூறையாடியவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

குறிஞ்சிப்பாடி தொகுதி அதிமுக வேட்பாளராக முதலில் ராம பழனிச்சாமி அறிவிக்கப்பட்டார். பின்னர் அவரை மாற்றி செல்வி ராமஜெயம் அறிவிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராம பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்தை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர். இதில் அங்கிருந்த ஜன்னல் கண்ணாடிகள், மேஜை நாற்காலிகள் உடைக்கப்பட்டன.

மேலும் வாசலில் நின்றிருந்த காரும் அடித்து நொறுக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த தும் திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments