100 நாட்களில் தீர்வு.! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி

0 1894
100 நாட்களில் தீர்வு.! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி

தமிழக மக்களின் அனைத்து அடிப்படை பிரச்சினைகளுக்கும் திமுக ஆட்சி மலர்ந்த 100 நாட்களுக்குள் தீர்வு எட்டப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் திட்டவட்டமாக உறுதி அளித்துள்ளார். சென்னை கொளத்தூர் தொகுதியில் திங்கட்கிழமை
வேட்புமனு தாக்கல் செய்யும் மு.க. ஸ்டாலின், திருவாரூரில் இருந்து சூறாவளி சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.

சென்னை - அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்"
என்ற திட்டத்தில் பெறப்பட்ட புகார் மனுக்கள் மீதான தீர்வு குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, குறும்படம் ஒன்றை வெளியிட்ட மு.க. ஸ்டாலின், 17 லட்சத்து 70 ஆயிரம் மனுக்கள் வாங்கப்பட்டு, 77 பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இந்த மனுக்கள்
மீதான தீர்வு, 100 நாட்களுக்குள் எட்டப்படும் என அண்ணா மற்றும் கருணாநிதி மீது ஆணையிட்டு உறுதி அளிப்பதாக மு.க. ஸ்டாலின்
தெரிவித்தார்.

இந்த பெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மே 2ஆம் தேதி திறக்கப்படும் என கூறினார். எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுயில் தான் அதிக மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். ஒட்டுமொத்தமாக பொதுமக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்காக தனித்துறை உருவாக்கப்பட்டு, இதற்கென தனியாக ஊழியர்களும் பணியமர்த்தப் படுவார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

இதனிடையே, சென்னை கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க. ஸ்டாலின் திங்கட்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளார். இதன்பின்னர், திருவாரூர் சென்று, அங்கிருந்து, தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணத்தை மு.க. ஸ்டாலின் தொடங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments