கருப்பு நிறமாக மாறிய யமுனா நதி - டெல்லி மக்கள் கவலை

0 1605
கருப்பு நிறமாக மாறிய யமுனா நதி - டெல்லி மக்கள் கவலை

இந்தியாவின் முக்கிய நதிகளில் ஒன்றான யமுனா நதியில் தண்ணீர் முழுவதும் கருப்பு நிறமாக மாறி உள்ளது.

மேலும் சனிக்கிழமையன்று ஆறு முழுவதிலும் நுரை மிதந்து வந்ததால், கவலை அடைந்துள்ள டெல்லி மக்கள், உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

டெல்லியின் 60 சதவீத குடிநீர் தேவை, யமுனா நதி மூலமாக பூர்த்தி செய்யப்படும் நிலையில், தொழிற்சாலை கழிவுகள் மற்றும் மனித கழிவுகளால் தான் யமுனா நதி மாசடைந்துள்ளதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments