தண்ணீர் குடிக்க கோயிலுக்குள் சென்ற இஸ்லாமிய சிறுவன் மீது தாக்குதல்... 2 பேர் கைது

0 1829

உத்தரபிரதேசத்தில் தாகத்திற்கு தண்ணீர் குடிப்பதற்காக கோயிலுக்குள் சென்றதாக கூறப்படும் இஸ்லாமிய சிறுவன் மீது தாக்குதல் நடத்திய பராமரிப்பாளர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காசியாபாத் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய சிறுவன் ஒருவன், தாகமாக இருந்ததால் அங்குள்ள கோயிலுக்குள் தண்ணீர் குடிப்பதற்காக சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. அவனது பெயர் மற்றும் விபரங்களை விசாரித்த கோயில் பாதுகாவலர்கள் 2 பேர், ஏன் கோயிலுக்குள் வந்தாய் எனக்கேட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் சிறுவனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

இந்த வீடியோ வைரலான நிலையில், விசாரணை நடத்திய காசியாபாத் போலீசார், சிறுவனை தாக்கிய ஸ்ரீங்கீ நந்தன் யாதவ் மற்றும் சிவானந்தா சரஸ்வதி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். சிறுவன் தாக்கப்பட்டதற்கு தேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments