பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் வழக்கு: எஸ்பி கண்ணனுக்கு மீண்டும் சம்மன் அனுப்பி விசாரிக்க சிபிசிஐடி முடிவு

0 2107
பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் வழக்கு: எஸ்பி கண்ணனுக்கு மீண்டும் சம்மன்

பெண் ஐபிஎஸ் அதிகாரியைப் புகார் அளிக்க விடாமல் தடுத்த எஸ்பி கண்ணன், சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகாததால் மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது.

சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த அதிகாரி தனக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகப் பெண் எஸ்பி புகார் அளித்தார். புகார் அளிக்க விடாமல் அப்போதைய செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தன்னைத் தடுத்ததாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பான வழக்கில் பதவி நீக்கப்பட்ட கண்ணனையும் விசாரணைக்கு ஆஜராக சிபிசிஐடி சம்மன் அனுப்பியது.

அவர் பெண் எஸ்பியைத் தடுத்தபோது உடன் நின்ற காவலர்களிடம் ஏற்கெனவே விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட டிஜிபி அந்தஸ்து  ஐபிஎஸ் அதிகாரி நேற்று விசாரணைக்கு ஆஜரான நிலையில் கண்ணன் ஆஜராகவில்லை. இந்த வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வரும் செவ்வாயன்று சிபிசிஐடி அறிக்கை அளிக்க உள்ளதால் கண்ணனுக்கு மீண்டும் சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments