கடந்த ஆண்டு போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட கறுப்பின பெண்ணின் மரணத்துக்கு நீதிக்கேட்டு பேரணி

0 852
அமெரிக்காவில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட கறுப்பின பெண் பிரியோனா டெய்லரின் மரணத்துக்கு நீதிக்கேட்டு அவரது நினைவு நாளில் ஏராளமான மக்கள் பேரணியில் ஈடுபட்டனர்.

அமெரிக்காவில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட கறுப்பின பெண் பிரியோனா டெய்லரின் மரணத்துக்கு நீதிக்கேட்டு அவரது நினைவு நாளில் ஏராளமான மக்கள் பேரணியில் ஈடுபட்டனர்.

கென்டக்கியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் தேதி போதைப்பொருள் கடத்தல் தொடர்பான சோதனையின்போது பிரியோனா டெய்லர் என்ற இளம்பெண் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவரது மரணத்துக்கு காரணமான போலீசார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் டெய்லரின் நினைவுநாளையொட்டி நினைவிடத்தில் திரண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அவரது மரணத்துக்கு நீதிக்கேட்டு பிரமாண்ட பேரணியில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments