அதிவேகத்தில் வந்த கார் மரத்தில் மோதி விபத்து.. இளைஞர் பலி - மனைவிக்கு படுகாயங்களுடன் சிகிச்சை

0 2773
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அதிவேகமாக வந்த ஸ்விப்ட்(swift) கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அதிவேகமாக வந்த ஸ்விப்ட்(swift) கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

சாப்ட்வேர் இன்ஜினியரான ராகேஷ், தனது மனைவியுடன் ஹைதராபாத்திலிருந்து மகபூப் நகருக்கு சென்றுகொண்டிருந்தார். அதிவேகத்தில் காரை இயக்கிவந்த ராகேஷ் திடீரென பிரேக் போட முயன்றதால், கட்டுப்பாட்டை இழந்த கார், சறுக்கி சென்று சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதியது.

ராகேஷ், சீட் பெல்ட் அணிந்திருந்ததையடுத்து அவரது காரிலிருந்த ஏர்-பேக் செயல்பட்டது. இருப்பினும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற போலீசார், படுகாயமடைந்த ராகேஷின் மனைவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துடன் விபத்துக்குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments