புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்ட சச்சின் வாசி மிகவும் நேர்மையானவர் - சஞ்சய் ராவத்

0 1551
தேசியப் புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்ட சச்சின் வாசி மிகவும் நேர்மையானவர் என சிவசேனாவின் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

தேசியப் புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்ட சச்சின் வாசி மிகவும் நேர்மையானவர் என சிவசேனாவின் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

முகேஷ் அம்பானி வீட்டருகே காரில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில், காரின் உரிமையாளர் மன்சுக் ஹிரன் உடல் ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்டது.

தனது கணவர் மரணத்தில் காவல் உதவி ஆய்வாளர் சச்சின் வாசிக்குத் தொடர்புள்ளதாக மன்சுக்கின் மனைவி குற்றஞ்சாட்டினார்.

இதையடுத்துத் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள், சச்சின் வாசியை நேற்றிரவு கைது செய்து 13 மணி நேர விசாரணைக்குப் பின் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்நிலையில் சச்சின் வாசி மிகவும் நேர்மையானவர் என்றும், இந்த வழக்கை மும்பை காவல்துறையே விசாரிக்க வேண்டும் என்றும், மத்தியப் புலனாய்வு அமைப்புகள் தேவையில்லை என்றும் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments