இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 25,320 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 25,320 பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 84 நாட்களில் இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 320 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 44 நாட்களில் இல்லாத வகையில் ஒரேநாளில் கொரோனாவால் 161 பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிரத்தில் மட்டும் புதிதாக 15 ஆயிரத்து 602 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி இந்தியாவில் தற்போதைய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 10 ஆயிரத்து 544 ஆக உள்ளது.
நேற்று மாலை வரை இந்தியாவில் 2 கோடியே 97 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் மத்திய நலவாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Comments