காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் வாக்குவாதம் ; துணை ராணுவ படையினர் குவிப்பு

0 3252
புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மோதல் ஏற்பட்டதை அடுத்து, அங்கு துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மோதல் ஏற்பட்டதை அடுத்து, அங்கு துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் தேசிய முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், திமுக 13 தொகுதிகளிலும் பிற கட்சிகள் 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

இந்த நிலையில் காங்கிரஸ் போட்டியிடும் 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம், அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் திக்விஜய் சிங், பல்லம் ராஜு, சஞ்சய் தத், நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, கடந்த தேர்தலில் 21 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்ட நிலையில், இந்த தேர்தலில் குறைவான தொகுதிகளே ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறி நிர்வாகிகள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு திமுகவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

மூத்த நிர்வாகிகள் அவர்களை சமாதானப்படுத்த முயன்றும், வாக்குவாதம் முற்றியதால், முன்னெச்சரிக்கையாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments