திமுக தேர்தல் அறிக்கையில் சில திருத்தங்கள் என மு.க.ஸ்டாலின் அறிக்கை..!

0 9508
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற மத்திய அரசிடம் திமுக வலியுறுத்தும் என்கிற உறுதிமொழியைத் தேர்தல் அறிக்கையில் சேர்த்துக் கொள்வதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரிச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசிடம் வலியுறுத்தும் என்கிற உறுதிமொழியைத் தேர்தல் அறிக்கையில் சேர்த்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சனிக்கிழமையன்று வெளியிட்ட திமுக தேர்தல் அறிக்கையில் 500ஆவது உறுதிமொழியில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள மூன்று நாடுகளுடன் நான்காவது நாடாக இலங்கையையும் சேர்த்து, இந்திய முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் எனக் குறிப்பிட்டிருந்தது.

மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 500ஆவது உறுதிமொழியை, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றும், இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றும் திருத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு எதிரான சென்னை - சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படாது என உறுதியளித்துள்ளார். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை 2020 நிராகரிக்கப்படும் என்றும்,  காட்டுப்பள்ளித் துறைமுகம் அமைக்க அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments