அமைச்சர் கடம்பூர் ராஜுவின் காரை சோதனை செய்த விவகாரத்தில், தேர்தல் பறக்கும்படை அதிகாரி பணியிடமாற்றம்

0 7683
அமைச்சர் கடம்பூர் ராஜுவின் காரை சோதனை செய்த விவகாரத்தில், தேர்தல் பறக்கும்படை அதிகாரி பணியிடமாற்றம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அமைச்சர் கடம்பூர் ராஜுவின் காரை சோதனை செய்த விவகாரத்தில், தேர்தல் பறக்கும் படை அலுவலர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

நேற்று ஊத்துபட்டி அருகே வந்து கொண்டிருந்த அமைச்சர் கடம்பூர் ராஜுவின் கார் மற்றும் உடன் வந்த கட்சி நிர்வாகிகளின் கார்களை நிறுத்தி, தேர்தல் பறக்கும் படை அலுவலர் மாரிமுத்து என்பவர் சோதனை மேற்கொண்டார்.

கடந்த 2ஆம் தேதி இதே மாரிமுத்து கழுகுமலையில் அமைச்சருடன் வந்த கார் ஒன்றை சோதனை செய்ததாகக் கூறப்படுகிறது. எனவே திட்டமிட்டு இதுபோன்ற சோதனையில் மாரிமுத்து ஈடுபடுவதாக அமைச்சர் தரப்பில் புகாரளிக்கப்பட்டது.

அதனடிப்படையில் மாரிமுத்து, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments