இயற்கை, பேராண்மை பட இயக்குனர் ’இயற்கை எய்தினார்’..மிகவும் தன்மையானவர் ஜனநாதன் - விஜய்சேதுபதி

0 5925
பிரபல திரைப்பட இயக்குநர் ஜனநாதன் காலமானார் ; அவருக்கு வயது 61

பிரபல திரைப்பட இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் உடல்நலக்குறைவல் உயிரிழந்துள்ள செய்தி ரசிகர்கள் மத்தியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர்கள் ஷ்யாம், அருண்விஜய் நடிப்பில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான படம் ’இயற்கை’. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.பி.ஜனநாதன். இதைத் தொடர்ந்து ’ஈ’, ’பேராண்மை’, ’புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ என பல்வேறு சமூக பிரச்னைகளை மையப்படுத்திய படங்களை இயக்கியுள்ளார்.

கம்யூனிச சிந்தனையாளரான ஜனநாதன் தற்போது 'லாபம்' படத்தை இயக்கிவருகிறார். தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் முக்கியமான அரசியல்,
பொதுவுடமை கருத்துகளைக் கையாளும் ஜனநாதன் 'லாபம்' படத்தில் விவசாயத்தில் நுழைந்திருக்கும் கார்ப்பரேட் அரசியல் குறித்து பேசியிருக்கிறார்.

‘லாபம்’படத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் போஸ்ட் புரொடக் ஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்நிலையில் இதன் எடிட்டிங் பணியில் இருந்த ஜனநாதன் கடந்த வியாழக்கிழமை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனது இல்லத்துக்கு சாப்பிடுவதற்கு சென்றிருக்கிறார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பாததால், அவரது உதவியாளர்கள் வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது கதவு திறந்திருக்க, சுயநினைவின்றி ஜனநாதன் மயங்கி கிடந்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த உதவியாளர்கள், அவரை மீட்டு கிரீம்ஸ் ரோட்டிலுள்ள அப்போலா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதையடுத்து எஸ்.பி.ஜனநாதனுக்கு மூளைக்குசெல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் எந்த முன்னேற்றமும் இல்லாமல், ஜனநாதனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது.இந்தநிலையில், எஸ்.பி ஜனநாதன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

எஸ்.பி ஜனநாதன் மிகவும் எளிமையானவர். தன்னுடைய ஆபீசுக்கு நடிக்க வாய்ப்பு கேட்டு செல்பவர்களிடம் கூட மிகவும் தன்மையாகவும், மரியாதையாகவும் பழககூடியவர் ஜனனாதன் என்றும், தான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி கொண்டிருந்த போது அவரின் ஆபிஸீக்கு ஒரு முறை போயிருந்ததாக விஜய்சேதுபதி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

எஸ்.பி ஜனனாதன் மீது கொண்ட அளவற்ற அன்பினால் நடிகர் விஜய்சேதுபதி தொடர்ந்து, அவருக்கு பல உதவிகள் செய்துவந்தார். பல நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஜனநாதன் இயக்க, தன் நண்பருடன் சேர்ந்து 'லாபம்' படத்தை தயாரித்து வந்தார் விஜய்சேதுபதி. படத்தின் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் ஜனநாதன் திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ள செய்தி பட குழுவினரை மட்டும் அல்லாமல் அவரது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments