ஆந்திராவில் ஆட்டோ மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 6 பேர் பலி

0 822
ஆந்திராவில் கூலித் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

ஆந்திராவில் கூலித் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

லயன் தாண்டா கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் 14 பேர் அதிகாலையில் வேலைக்காக ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர்.

அவர்கள் கொல்லப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டுருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் ஆட்டோ மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.

இதில் ஆட்டோவில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காயமடைந்த 8 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments