விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு விபத்து தொடர்பாக ஒருவர் கைது

0 1289
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு விபத்து தொடர்பாக ஒருவர் கைது

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ள நிலையில், விபத்து தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குருமூர்த்தி நாயக்கன்பட்டியில் இயங்கி வந்த வாசுதேவன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 3 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.

இதனிடையே கவனக்குறைவாக செயல்பட்டு விபத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் ஆலை உரிமையாளர் விசாகன், போர்மேன் துரைராஜ் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், துரைராஜை கைது செய்துள்ளனர்.

தலைமறைவாக உள்ள விசாகனை தேடி வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் விருதுநகர் மாவட்டத்தில் 5 பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 34 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments