இந்தியா - இங்கிலாந்து மோதும் 2வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி : முதல் ஆட்டத்தில் தோற்றதற்கு இந்தியா இன்று பதிலடி தருமா ?

0 3241
இந்தியா - இங்கிலாந்து மோதும் 2வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி : முதல் ஆட்டத்தில் தோற்றதற்கு இந்தியா இன்று பதிலடி தருமா ?

இந்தியா -இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையேயான 2வது 20ஓவர் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெறுகிறது.

இரு அணிகள் இடையே  ஐந்து  20ஓவர் போட்டிகள்  நடைபெறுகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரு அணிகள் மோதும் 2வது போட்டி அகமதாபாத்தில் இன்றிரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

முதல் ஆட்டத்தில் பெற்ற தோல்விக்கு இன்றைய ஆட்டத்தில் இந்தியா பதிலடி கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

வெற்றியை பெற வேண்டும் என்ற முனைப்பில் இங்கிலாந்தும், தோல்விக்கு பதிலடி தர வேண்டும் என்று இந்தியாவும் மோதுவதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments