தமிழகத்தில் சூடு பிடிக்கத் தொடங்கும் பிரச்சாரம்..! அரசியல் கட்சி வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

0 1894
தமிழகத்தில் சூடு பிடிக்கத் தொடங்கும் பிரச்சாரம்..! அரசியல் கட்சி வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

தமிழகம் முழுவதும் அதிமுக, திமுக உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதி திமுக வேட்பாளர் பொன்முடி திறந்த வேனில் வீதிய வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். முன்னதாக திருக்கோவிலூரில் உள்ள அண்ணா சிலை மற்றும் கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்த அவர், சென்னகுணம், ஆயந்தூர், முகையூர், திருக்கோவிலூர், சித்திலிங்கமடம், திருவெண்ணைநல்லூர் ஆகிய ஊர்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ் எம் சுகுமார் அம்மூர் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள பாப்பாத்தி அம்மன்கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து பிரச்சாரத்தை தொடங்கினார். அந்த பகுதியில் பொதுமக்கள், வியாபாரிகள், உள்பட அனைத்து தரப்பினரையும் சந்தித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும்  சிற்றுண்டி உணவகத்தில் பொதுமக்களுடன் அமர்ந்து உணவினை உண்டபடியும் அவர் வாக்கு சேகரித்தார். 

யிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தொகுதியில் அதிமுக வேட்பாளர் பி.வி பாரதி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி அவர் பிரச்சாரம் செய்தார். வேட்பாளருடன் அதிமுகவினரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 

திருச்சி மாவட்டம்  திருவெறும்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ப.குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  வேங்கூர் பகுதியில் வீடு வீடாக சென்று அதிமுக அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பழனி தொகுதி அதிமுக வேட்பாளர் ரவி மனோகரன் அறிமுகக் கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது,இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கலந்து கொண்டு ரவி மனோகரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மகான் பக்கீர் அவுலியா தர்காவில் நடைபெற்ற 102 வது கந்தூரி விழாவில் அதிமுக வேட்பாளர் வைகைச்செல்வன் கலந்து கொண்டு தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து சொக்கலிங்கபுரம் தெற்குத்தெரு சின்னபுளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சமுதாய தலைவர்களை சந்தித்து பேசிய அவர், தேர்தலில் ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டார்.

திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் திமுக வேட்பாளர் கே.பி. சங்கரை ஆதரித்து மாவட்ட பொறுப்பாளர் சுதர்சனம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மேலும் தொகுதியில் உள்ள ஒவ்வொரு வாக்காளரையும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டும் என திமுக நிர்வாகிகளை அவர் கேட்டுக் கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் வீரக்குமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக பழனி மலை அடிவாரத்தில் உள்ள பாதவிநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அவர் பிரச்சாரத்தை தொடங்கினார். மலையடிவாரத்தில் உள்ள வியாபாரிகளை நேரில் சந்தித்து அவர் தமக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

நாகப்பட்டினம் அமமுக வேட்பாளர் RCM மஞ்சுளா சந்திரமோகன் நாகை பெரியகடை வீதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். நாகப்பட்டினம் பெரியகடைவீதி, நாணயக்கார வீதி, ஆசாத் மார்க்கெட், உள்ளிட்ட பகுதிகளில் பிரஷர் குக்கர் சின்னத்திற்கு அவர் வாக்கு சேகரித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.பன்னீர்செல்வம் மக்களிடம் வாக்கு சேகரித்தார். புதுப்பாளையம் ஒன்றியம் மஷார், நயம்பாடி, நம்மியந்தல் ஆகிய கிராமங்களில் வீதி வீதியாக சென்ற அவர் அதிமுக அரசின் சாதனைகளை எடுத்து சொல்லி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த நிகழ்ச்சியின் போது புதுப்பாளையம் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் இளங்கோ அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments