5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்ய பிரதமர் தலைமையில் டெல்லியில் பாஜக ஆலோசனை

5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்ய பிரதமர் தலைமையில் டெல்லியில் பாஜக ஆலோசனை
சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ள தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் பாஜக வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்காக பாஜகவின் உயர் மட்ட தேர்தல் குழுக்கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.
மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத்சிங், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் மேற்குவங்கம், கேரளா ஆகிய மாநிலங்களின் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக ஏற்கனவே வெளியிட்டுள்ளது. தமிழகம் புதுச்சேரிக்கான வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்கப்படும் என்று பாஜக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments