தமிழகத்தில் 21 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!

0 8932
தமிழகத்தில் 21 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 25 தொகுதிகளில் முதல் கட்டமாக 21 வேட்பாளர்களை கட்சித் தலைமை நேற்றிரவு அறிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழு டெல்லியில் கூடி ஆலேசனை நடத்தியதை அடுத்து தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் முதற்கட்டமாக 21 பெயர்களை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. பொன்னேரி தொகுதியில் துரை.சந்திரசேகரும் ஊத்தங்கரை தொகுதியில் ஜே.எஸ்.ஆறுமுகமும் போட்டியிடுகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர் தனி தொகுதியில் செல்வப்பெருந்தகை போட்டியிடுகிறார். சோளிங்கர் தொகுதியில் முனிரத்தினம் , கள்ளக்குறிச்சி தொகுதியில் மணிரத்தினம் ,ஓமலூர் தொகுதியில் மோகன் குமாரமங்கலம் போட்டியிடுவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் திருமகன் ஈவெரா, உதகமண்டலம் தொகுதியில் ஆர்.கணேஷ் போட்டியிடுகின்றனர். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் மயூரா ஜெயக்குமார் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக களமிறங்குகிறார்.

உடுமலைப்பேட்டை தொகுதியில் தென்னரசு, விருத்தாச்சலம் தொகுதியில் ராதாகிருஷ்ணன் அறந்தாங்கி தொகுதியில் ராமச்சந்திரன் காரைக்குடி தொகுதியில் எஸ்.மாங்குடி மேலூர் தொகுதியில் டி.ரவிச்சந்திரன் ,ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் மாதவராவ் போட்டியிடுவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

சிவகாசி தொகுதியில் அசோகன், திருவாடானை தொகுதியில் கரு மாணிக்கம் போட்டியிடுகின்றனர். ஸ்ரீவைகுண்டத்தில் ஊர்வசி அமிர்தராஜ் தென்காசியில் பழனி நாடார், நாங்குநேரியில் ரூபி மனோகரன் கிள்ளியூரில் எஸ்.ராஜேஷ்குமார்போட்டியிடுகின்றனர்.

விளவங்கோடு உள்பட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments