ஈரோட்டில் அதிகரிக்கும் வெப்பத்தால் சதம் அடித்த வெயில்

0 7866
தமிழ்நாட்டில் ஈரோட்டில், வெயில் சதம் அடித்திருக்கிறது. இளவேனிற்காலமான மாசி மாதத்தில், மதுரை, திருநெல்வேலி, சேலம், திருச்சி உள்ளிட்ட நகரங்களில் வெப்பம் தகிக்கிறது.

தமிழ்நாட்டில் ஈரோட்டில், வெயில் சதம் அடித்திருக்கிறது. இளவேனிற்காலமான மாசி மாதத்தில், மதுரை, திருநெல்வேலி, சேலம், திருச்சி உள்ளிட்ட நகரங்களில் வெப்பம் தகிக்கிறது.

சனிக்கிழமை அன்று ஈரோடு மாநகரில், வெப்பத்தின் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட்டாகப் பதிவாகியுள்ளது.

சேலத்திலும் சற்றேறக்குறைய சுமார் 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு தட்பவெப்பம் பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தியில் 99 புள்ளி 5 டிகிரி பாரன்ஹீட்டும், மதுரை மற்றும் பாளையங்கோட்டையில், தலா 98 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

மாநிலத்திலேயே குறைந்த அளவாக, கொடைக்கானலில் 63 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments