விருதுநகர் மாவட்டத்தில் மீண்டும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து : சிகிச்சைப் பலனின்றி ஒருவர் பலி

0 3119
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்தனர்‍.

விருதுநகர் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் காயமடைந்த ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

குருமூர்த்திநாயக்கன்பட்டியில் இயங்கி வந்த வாசுதேவன் என்பவருக்குச் சொந்தமான அந்த பட்டாசு ஆலையில் கம்பி மத்தாப்பு தயாரிக்கும் பணியில் மருந்துகள் தடவிய குச்சிகளை கீழே கொட்டும் போது உராய்வு காரணமாக தீப்பிடித்தாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் புதுராஜா என்பவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மற்ற மூவரில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments