ரயில்களில் குறைபாடுகளைக் களைய ஊழியர்களுக்கு அக்கறை இல்லை - சென்னை உயர் நீதிமன்றம்

0 1224
ரயில்களிலும் நிலையங்களிலும் உள்ள குறைபாடுகள், விதிமீறல்களைக் களைய ஊழியர்களோ, ரயில்வே பாதுகாப்புப் படையோ அக்கறை காட்டுவதில்லை எனச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ரயில்களிலும் நிலையங்களிலும் உள்ள குறைபாடுகள், விதிமீறல்களைக் களைய ஊழியர்களோ, ரயில்வே பாதுகாப்புப் படையோ அக்கறை காட்டுவதில்லை எனச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ரயில் பயணத்தின்போது தவறி விழுந்து பலியான இருவரின் குடும்பத்தினர் இழப்பீடு கோரிய மனுக்களை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், இரு குடும்பத்தினருக்கும் தலா 8 லட்ச ரூபாயை 12 விழுக்காடு வட்டியுடன் வழங்கத் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு உத்தரவிட்டார்.

பயணிகளுக்கு அடிப்படை வசதிகளைச் செய்வதில்லை என்றும், முன்பதிவுப் பெட்டிகளில் பதிவு செய்யாதோர் பயணிப்பதாகவும், ஓடும் ரயில்களில் கதவுகள் மூடப்படுவது இல்லை என்றும் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெரும்பாலான ரயில் நிலையங்களில் தண்டவாளங்களைக் கடக்க முறையான வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுக்காத நிலையில், தண்டவாளத்தைக் கடக்கும் போது ஏற்படும் விபத்துகளில் பலியானோருக்கு இழப்பீடு வழங்க மறுப்பதை ஏற்க முடியாது என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments