தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தற்போதுவரை தமிழகம் முழுவதும் ரூ.100 கோடி மதிப்புள்ள தங்கம், பணம் பறிமுதல்

0 1656

மிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தற்போதுவரை, சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்க பறக்கும் படையினர் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட 56 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் போலீசாரின் சோதனையில் சிக்கியுள்ளது. மேலும், 40 கோடியே 70லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments